எனது பந்துவீச்சை எதிர்த்து ஆடியவர்களில் சிறந்த பேட்ஸ்மேனாக அந்த இந்திய வீரரைத்தான் சொல்வேன் - ஆண்டர்சன்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

Update: 2024-07-12 02:39 GMT

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவர் ஏராளமான சாதனைகள் படைத்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'எனது பந்துவீச்சை எதிர்த்து ஆடியவர்களில் சிறந்த பேட்ஸ்மேனாக இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரை சொல்வேன். அவருக்கு எதிராக நான் எதுவும் சிறப்பு திட்டத்துடன் பந்து வீசியதாக நினைவில்லை. ஆனால் களம் இறங்கியதும் அவருக்கு எதிராக மோசமான பந்தை வீசிவிடக்கூடாது என்ற நினைப்புடன் செயல்படுவேன். அவர் இந்தியாவின் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தார். இந்தியாவில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டால், அதன் பிறகு மைதானத்தில் ஒட்டுமொத்த சூழலும் அப்படியே மாறி விடும். அந்த அளவுக்கு அவரது விக்கெட் மிகப்பெரியது' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்