முதல் டி20 போட்டி; பூரன் அதிரடி ஆட்டம்... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பூரன் 26 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-08-24 01:27 GMT

Image Courtesy: AFP 

டிரினிடாட்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிக் அத்தானஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும், ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் புகுந்த பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பூரன் 26 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்