பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… வீடியோ

சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.;

Update:2025-03-19 19:21 IST
பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… வீடியோ

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.இதனையடுத்து, வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை அணி வீரர்களும் பயிற்சியில் இறங்கியுள்ளனர்

அதில், பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா வீசிய பந்தில் தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்சர் பறக்க விட்டார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்