'ஈ சாலா கப் நமதே' கூறிய டி வில்லியர்ஸ்.. வேண்டாம் என மெசெஜ் செய்த விராட்

விராட் கோலி உடனான சுவாரசிய நிகழ்வு ஒன்றை ஏபி டி வில்லியர்ஸ் பகிர்ந்துள்ளார்.;

Update:2025-03-20 13:11 IST
ஈ சாலா கப் நமதே கூறிய டி வில்லியர்ஸ்.. வேண்டாம் என மெசெஜ் செய்த விராட்

image courtesy: PTI

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 17 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாத அந்த அணி 3 முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த மோசமான வரலாற்றை புதிய கேப்டன் ரஜத் படிதார் மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் முழக்கமாக 'ஈ சாலா கப் நமதே' (இந்த வருடம் கோப்பை நமதே) இருந்து வருகிறது. இதனை வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் மற்ற அணியின் ரசிகர்கள் இதனை வைத்து பெங்களூரு அணியினரை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பதும் உண்டு.

இந்நிலையில் 'ஈ சாலா கப் நமதே' வார்த்தையை கூறியதற்கு விராட் கோலி மெசெஜ் செய்து இந்த முறை வேண்டாம் என்று தடுத்ததாக ஏபி டி வில்லியர்ஸ் சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலியிடம் 'ஈ சாலா கப் நமதே' என்று கூறினேன். அதற்கு விராட் கோலி, 'தயவு செய்து இப்போது வேண்டாம். அதை நிறுத்துங்கள்' என்று மெசெஜ் செய்தார். நான் அதற்காக கொஞ்சம் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். உண்மையை கூற வேண்டுமென்றால் இதை சொல்லி சொல்லி நானும் சோர்வடைந்து விட்டேன். ஆனால் இம்முறை நாம் வெல்வது உறுதி. பெங்களூரு கோப்பையை வென்றால் விராட் கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாட தயார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்