147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்த சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

Update: 2024-12-29 03:27 GMT

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களுடன் தடுமாறி வருகிறது. மார்னஸ் லபுசாக்னே 43 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் பும்ரா கைப்பற்றிய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. வாக்கர் யூனிஸ் - 7725 பந்துகள்

2. டேல் ஸ்டெயின் - 7848 பந்துகள்

3. ரபடா - 8153 பந்துகள்

4. பும்ரா - 8484 பந்துகள் 

Tags:    

மேலும் செய்திகள்