வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2024-10-25 16:26 IST

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்காம், மேத்யூ பிரிட்ஸ்கே, பிரெவிஸ், டோனி டி சார்சி, கேஷவ் மகராஜ், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பட்டர்சன், டேன் பீட், ரபடா, ஸ்டப்ஸ், ரையன் ரிக்கெல்டன் மற்றும் கைல் வெர்ரேயின்

Tags:    

மேலும் செய்திகள்