13- வயது வீரரை ரூ. 1.1 கோடிக்கு வாங்கியது ஏன்..? - ராஜஸ்தான் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

Update: 2024-11-26 14:39 GMT

ஜெட்டா,

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்த மிக குறைந்த வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டியிட்டன. இதனால் இவரது விலை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திலிருந்து உயர்ந்து கொண்டே சென்றது.

முடிவில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் சூர்யவன்ஷியை வாங்கியதற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

அதில், "அவரிடம் சில நல்ல திறன்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே அவருக்கு இது வளர்வதற்கான நல்ல சூழ்நிலையாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். வைபவ் எங்களுடைய பயிற்சி முகாமுக்கு வந்தார். அங்கே அவருடைய திறமைகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்