குருனால் பாண்ட்யாவுக்கு ரூ.5.75 கோடி.. மற்ற வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கிய பெங்களூரு..?
பெங்களூரு அணி மெகா ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்திருந்தது.
ஜெட்டா,
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக (24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்தது.
இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் 19 வீரர்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணியில் மொத்தம் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதனடிப்படையில் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஏலத்தொகை பின்வருமாறு:-
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. விராட் கோலி - ரூ. 21 கோடி
2. ரஜத் படிதார் - ரூ. 11 கோடி
3. யாஷ் தயாள் - ரூ. 5 கோடி
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
1. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - ரூ. 12.50 கோடி
2. பில் சால்ட் (இங்கிலாந்து) - ரூ. 11.50 கோடி
3. ஜித்தேஷ் சர்மா - ரூ. 11 கோடி
4. புவனேஷ்வர் குமார் - ரூ. 10.75 கோடி
5. லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) - ரூ. 8.75 கோடி
6. ரஷிக் தார் - ரூ. 6 கோடி
7. குருனால் பாண்ட்யா - ரூ. 5.75 கோடி
8. டிம் டேவிட் ( ஆஸ்திரேலியா) - ரூ. 3 கோடி
9. ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) - ரூ. 2.60 கோடி
10. சுயாஷ் சர்மா - ரூ. 2.60 கோடி
11. படிக்கல் - ரூ. 2 கோடி
12. நுவான் துஷாரா (இலங்கை) - ரூ. 2 கோடி
13. ரோமரியோ ஷெப்பர்டு (வெஸ்ட் இண்டீஸ்) - ரூ. 1.50 கோடி
14. லுங்கி நிகிடி ( தென் ஆப்பிரிக்கா) - ரூ. 1 கோடி
15. ஸ்வப்னில் சிங் - ரூ. 50 லட்சம்
16. மொஹித் ரதி - ரூ. 30 லட்சம்
17. அப்நந்தன் சிங் - ரூ. 30 லட்சம்
18. ஸ்வஸ்திக் சிகாரா - ரூ. 30 லட்சம்
19. மனோஜ் பந்தகே - ரூ. 30 லட்சம்