மேற்கு வங்காளம்: கிருஷ்ணா நகரில் மஹுவா மொய்த்ரா முன்னிலை

கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.;

Update:2024-06-04 17:02 IST

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அமிர்தா ராய் களமிறக்கப்பட்டார்.

தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா 6 லட்சத்து 24 ஆயிரத்து 711 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் அமிர்தா ராய் 5 லட்சத்து 67 ஆயிரத்து 628 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்