தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-04-03 12:47 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள டீக்கடைக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதனை தொடர்ந்து ஜல்பைகுரியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று தொழிலார்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.பின்னர் தமது சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்