விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.;
குமரி,
கன்னியாகுமரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றப்போவது யார்?, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 9,403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 3,411 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் யு.ராணி - 754
நாதக வேட்பாளர் ஜெமினி - 747