விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு; நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலா? - தேர்தல் அதிகாரி விளக்கம்

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-08 07:14 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இதனிடையே, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்திக்கு கடந்த 5ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்