கேரளாவில் 3 மொழிகளில் பேசி வாக்கு சேகரித்த விஜயதாரணி
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் பேசி விஜயதாரணி பிரசாரம் செய்தார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 26-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மலையாளம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.