வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.;

Update:2024-03-27 12:10 IST

சிதம்பரம்,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

தமிழகம் முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான இன்று இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார். அப்போது அவருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், தொண்டர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்