மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகை

பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வர உள்ளார்.

Update: 2024-04-11 17:07 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நாளை தமிழகம் வர உள்ளார்.

டெல்லியில் இருந்து நாளை காலை பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு வருகை தருகிறார். அங்கு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.நரசிம்மனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு, ஹெிகாப்டரில் சிதம்பரத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பிறகு, தஞ்சாவூர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, தஞ்சாவூர் பா.ஜனதா வேட்பாளர் எம்.முருகானந்தத்துக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார். மறுநாள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகனுக்கு ஆதரவு திட்டுகிறார்.

பின்னர், மாலை கோவை சென்று, அங்கு கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அடுத்ததாக, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்