தேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த மாநில கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பது உள்பட பல்வேறு விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மாநிலத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் ஆனந்த போஸ் தலையிடுவதாக கூறி அவர் மீது தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "2024 மக்களவை தேர்தலில் தொடர்ந்து தலையிட்டு வருவது குறித்தும், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல முயற்சிப்பது தொடர்பாகவும் ஆனந்த போஸ் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.