வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு

ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-13 08:20 GMT

ஐதராபாத்,

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா பார்வையிட்டார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்த லதா, அந்த இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கூறினார். மேலும் ஒரு பெண் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி, மாதவி லதா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்