பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளர் பின்னடைவு

பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரான அப்துல் சலாம், தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.;

Update:2024-06-04 17:26 IST

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பா.ஜ.க. சார்பில் கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் அப்துல் சலாம் போட்டியிட்டார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரான அப்துல் சலாம், தற்போது தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் மலப்புரம் தொகுதியில் ஐ.யு.எம்.எல். கட்சி வேட்பாளராக முகமது பஷீர், சி.பி.எம். வேட்பாளராக வாஷிப் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி மலப்புரம் தொகுதியில் ஐ.யு.எம்.எல். கட்சி வேட்பாளர் முகமது பஷீர் சுமார் 55 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்