திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்;
சிதம்பரம்,
சிதம்பரம் புறவழிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், தி.மு.க கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை 6.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர். பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.