தமிழ்நாட்டின் களம் 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளது - சீதாராம் யெச்சூரி

'இந்தியா' கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Update: 2024-04-11 19:19 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் களம் 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழ்நாட்டின் அரசியல் களம் 'இந்தியா' கூட்டணிக்கு மிகவும் சாதகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் அதன் கணக்கை தொடங்க முடியாததைப் போல், இந்த முறையும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வை தோற்கடிக்கும்.பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாட்டிற்கு பல பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்