'புற்றுநோயுடன் போராடுவதால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை' - பா.ஜனதா எம்.பி. சுசில் மோடி

கடந்த 6 மாதங்களாக புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும் சுசில் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-03 21:14 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுசில் மோடி, தான் கடந்த 6 மாதங்களாக புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த 6 மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவை தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரசாரத்தில் பங்கேற்கவோ முடியாது. இவை அனைத்தையும் பிரதமரிடம் நான் தெரிவித்து விட்டேன். எப்போதும் நாட்டுக்கும், பீகார் மாநிலத்துக்கும், கட்சிக்கும் நன்றியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

72 வயதான சுசில் மோடி பீகார் அரசியலில் தீவிரமாக இருந்தார் என்பதும், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்க்கையில் அவர் மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாகவும், மாநில நிதி மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்