"அம்மா உணவகம் அமைக்கப்படும்" - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பெண்கள் நடத்தும் மலிவு விலை உணவகங்கள் சிக்கிம் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Update: 2024-04-11 23:30 GMT

காங்டாக்,

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அரசு அமைத்திருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களமிறங்கி இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும தீவிர பிரசாரத்தில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது. இதற்கு மத்தியில் சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 74 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். இதில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று உள்ளன.

அதில் முக்கியமாக, 'அம்மா சமூக உணவகம்' என்ற பெயரில் பெண்களை தலைமையாக கொண்டு, பெண்களே நடத்தும் மலிவு விலை உணவகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தவிர பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள், மாநிலத்தை வளப்படுத்தவும், விவசாயிகளின் நன்மைக்காகவும் வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்