சென்னை: பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த 21ம் தேதி பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகின. பிரதமர் மோடி வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணியாக சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.