சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார் சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார்.;

Update: 2024-03-12 07:45 GMT

சென்னை,

சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்றார். அங்கு சரத்குமாருடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை  பா.ஜ.க.வுடன் இணைத்துக்கொண்டார்.

பா.ஜ.க.வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மக்கள் பணிக்கான தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும்தான் இந்த முடிவு. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியமைக்க சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுடன் கட்சியை இணைந்த பின் சரத்குமார் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்