தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-17 08:12 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குகள் அனைத்தும் திருச்சியில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன. 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்