தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி
மக்களவைத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. 2 கட்டங்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டு, அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் ஆனது.
இந்தநிலையில் மக்களவைத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:
1) விருதுநகர் - விஜய பிரபாகர்
2) மத்திய சென்னை - பார்த்த சாரதி
3) திருவள்ளூர் தனி - நல்ல தம்பி
4) தஞ்சை - சிவநேசன்
5) கடலூர் - சிவக்கொழுந்து
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.