பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் - சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி

பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-12 00:21 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்ற தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்கிறது. பொது தளத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைப்பதற்கான நேர்மறையான ஒரு முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையும். பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென நாடு எதிர்பார்க்கிறது" என்று அதில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்