அம்பாசமுத்திரத்தில் பிரதமா் மோடி இன்று பிரசாரம்
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி உரை நிகழ்த்துகிறார்;
சென்னை,
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் , தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியில் மாலை நடைபெறவுள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பாசமுத்திரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.