பா.ம.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Update: 2024-03-26 08:52 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட உள்ளது.

இதுதொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ம.க.வின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை ( புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்