அரசியல் அதிரடி திருப்பம்: பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.
திண்டிவனம்,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது.
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?, வேப்டாளர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.