கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன - பிரதமர் மோடி தாக்கு
கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்னேறவில்லை - பிரதமர் மோடி
வேலூர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழ் புத்தாண்டு வரும் 14ம் தேதி பிறக்கிறது. அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மண் புதிய வரலாற்றை படைக்கப்போகிறது என்று டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. பா.ஜ.க.வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன்.
தி.மு.க. என்பது குடும்ப நிறுவனம் போன்றது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழ்நாட்டு கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது.
மக்களை மொழி, மதம், சாதியால் பிரித்தாளும் வேலையை தி.மு.க. செய்கிறது. தி.மு.க.வின் செயல்பாடுகளை மக்கள் உணரும்போது அந்த கட்சி செல்லாக்காசாகிவிடும். காங்கிரசும், தி.மு.க.வும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தன. இதனால், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் புத்தாண்டு வரும் 14ம் தேதி பிறக்கிறது. அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மண் புதிய வரலாற்றை படைக்கப்போகிறது என்று டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. பா.ஜ.க.வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
கச்சத்தீவு
கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி துறையில் இந்தியா முன்னேற தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது - பிரதமர் மோடி
சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது. வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்றை நிகழ்த்த உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது. தமிழ் புத்தாண்டில் தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
வேலூரில் நடைப்பெற்று வரும் பிரசார கூட்டத்திற்கு தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார் பிரதமர் மோடி.
சகோதர, சகோதரிகளே
வேலூரில் பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவர், ‘தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என்று தமிழில் பேசி பிரசார பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கினார்.
வேலூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி:-
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி தற்போது வேலூர் சென்றடைந்தார்.
தமிழகத்தில், வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் பிரசாரம் களைகட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தும் மக்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று சென்னையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக 7-வது முறையாக தமிழகம் வந்தார்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தநிலையில், இன்று காலை சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். காலை 10.30 மணியளவில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அதன்பிறகு, கோவை செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), கூட்டணி கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மேலும் 3 முறை தமிழகம் வருகை தர இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி 13-ந்தேதி பெரம்பலூர், 14-ந்தேதி விருதுநகர், 15-ந்தேதி திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.