'தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி' - பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.;

Update:2024-04-12 14:38 IST

விருதுநகர்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ராதிகாவும், அவரது கணவர் சரத்குமாரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-

"பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை, மக்களின் ஆட்சியை, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்திருக்கிறார். அவரை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்து, அவரது கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். விருதுநகர் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக நான் இருப்பேன்.

தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி. அதை சிறப்பாக வழிநடத்திச் செல்லக்கூடியவர் அண்ணாமலை. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்காக திறக்கப்படும்.

மேலும் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி, ஜவுளி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிவகாசியில் கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்ட சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டு, பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்