'உத்தர பிரதேச மக்கள் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர்' - பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச மாநில மக்கள் மிகவும் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Update: 2024-06-04 15:53 GMT

லக்னோ,

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. அதே சமயம், 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றுள்ளார். அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வியை தழுவியுள்ளார்.

இந்நிலையில் 'உத்தர பிரதேச மக்கள் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உத்தர பிரதேச மாநில மக்கள் மிகவும் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்