நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா உயர்மட்டக் குழு ஆலோசனை
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இதில் பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம், புதியநீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடங்கள் என்பது முடிவாகவில்லை. புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் த.மா.கா, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதாவின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.