மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ஆரிப் நசீம் கான், தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.;

Update:2024-04-27 17:53 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஆரிப் நசீம் கான், தேர்தல் பிரசாரக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மராட்டிய மாநிலத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்கு வேண்டும், ஆனால் முஸ்லிம் வேட்பாளர்கள் வேண்டாமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மும்பை மத்திய மேற்கு தொகுதியில் போட்டியிட ஆரிப் நசீம் கான் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த தொகுதியில் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்ததால் ஆரிப் நசீம் கான் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக ஆரிப் நசீன் கான் அறிவித்துள்ளார். தன்னால் மராட்டிய மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சந்திக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்