காங்கிரசுக்கு ரூ. 3,500 கோடி அபராதம்: தேர்தல் முடியும்வரை நடவடிக்கை எடுக்கமாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டில் வருமானவரித்துறை உறுதி

3,500 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2024-04-01 07:28 GMT

டெல்லி,

2014-15 முதல் 2020-21 வரையிலான நிதியாண்டுகளில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த வருமானவரி கணக்கில் முரண்பாடு உள்ளதாகக்கூறி அக்கட்சிக்கு அபராதம் விதித்து வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

வட்டியுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 3,567 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ் வங்கிக்கணக்கில் இருந்து 135 கோடி ரூபாயை வருமானவரித்துறை எடுத்துள்ளது. இதனிடையே, வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் முடியும்வரை காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் வருமானவரித்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

வருமானவரித்துறையின் உத்தரவாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்