நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்தியில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை பா.ஜனதா நம்பி இருக்கும் சூழலில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-04 16:11 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜனதா கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பா.ஜனதா கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்