நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்தான் - சீமானின் கோரிக்கை நிராகரிப்பு
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.;
சென்னை,
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை வைத்தனர். படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பு கோரிக்கை வைத்தது.
இந்த நிலையில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மைக் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.