மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை

மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை பெற்றுள்ளார்.;

Update: 2024-06-04 05:13 GMT

வாரணாசி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்யா சிங் களமிறக்கப்பட்டார்.

தற்போதைய நிலவரப்படி மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 1 லட்சத்து 34 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங் 1 லட்சத்து 15 ஆயிரத்து 63 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்