வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் கைது: மராட்டியத்தில் பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக மராட்டியத்தில் 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

Update: 2024-04-26 15:23 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நாந்தேட் மாவட்டத்தில் 26 வயதான இளைஞர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார்.ராம்புரி தொகுதியில் வாக்களிக்க வந்த இளைஞர் இவிஎம் இயந்திரத்தை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சேதமடைந்த இவிஎம் இயந்திரம் மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என இளைஞர் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். எதனால் இளைஞர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பையாசாகேப் எட்கே என்கிற அந்த இளைஜர் சட்டம் மற்றும் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர் எனவும் 10 மாதங்களாக புனேவில் இருந்தவர் தற்போது கிராமத்துக்குத் திரும்பியதாகவும் ஏதேனும் கட்சியைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராம்புரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்