ஹெலிகாப்டரில் ஏறும்போது நிலைதடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி - வீடியோ

ஹெலிகாப்டரில் ஏறும்போது மம்தா பானர்ஜி நிலைதடுமாறி கிழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-27 10:20 GMT

கொல்கத்தா,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதில், மேற்குவங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டம் குல்டி பகுதியில் இன்று திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி  திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். மம்தா ஹெலிகாப்டரில் ஏறியபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். ஹெலிகாப்டரில் இருக்கையில் அமர முயன்றபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரில் மம்தா கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.    

Tags:    

மேலும் செய்திகள்