உத்தரபிரதேசத்தில் 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 'சீட்' மறுப்பு
உ.பி.யில் பா.ஜனதா வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது. இதில் 3 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அலகாபாத் தொகுதி எம்.பி. ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு பட்டியலில் இடம் இல்லை.
அந்த தொகுதியில் முன்னாள் கவர்னர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல புல்பூர் தொகுதியில் தற்போதைய எம்.பி. கேசரி தேவி படேலுக்கு பதிலாக, பிரவீன் படே எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
மேலும் பல்லியா தொகுதி எம்.பி. வீரேந்திர சிங் மஸ்துக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், மாநிலங்களவை எம்.பி.யுமான நீரஜ் சேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.