'பொள்ளாச்சியில் ஏற்கனவே தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதைப் போல் உள்ளது' - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

பொள்ளாச்சியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;

Update: 2024-04-16 15:40 GMT

Image Courtesy : @Udhaystalin

கோவை,

பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து உடுமலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிற தொகுதிகளைப் போல் பொள்ளாச்சியிலும் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதற்காக இங்கு வந்தேன். ஆனால், இங்குள்ள மக்களின் எழுச்சியை பார்க்கும்போது ஏற்கனவே இங்கு தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

இதே எழுச்சி தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை நீடிக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். பொள்ளாச்சியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்."

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்