நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசார பாடல் வெளியீடு
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஆகியோர் பிரசார பாடலை வெளியிட்டனர்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார பாடலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கான நீதி என்ற கருப்பொருளின் அடிப்படையில் பாடல் அமைந்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் ஆகியோர் பிரசார பாடலை வெளியிட்டனர்.
அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், "தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அடங்கிய உத்தரவாத அட்டைகளை 8 கோடி வீடுகளில் வழங்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. சுமார் 80 சதவீத அட்டைகளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் வினியோகித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.