நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;

Update:2024-06-01 07:01 IST

லக்னோ,


Live Updates
2024-06-01 10:34 GMT

நாடாளுமன்ற 7-வது கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார்: 42.95%

சண்டிகர்: 52.61%

இமாசல பிரதேசம்: 58.41%

ஜார்க்கண்ட்: 60.14%

ஒடிஷா: 49.77%

பஞ்சாப்: 46.38%

உத்தரபிரதேசம்: 46.83%

மேற்கு வங்காளம்; 58.46%

2024-06-01 08:33 GMT



2024-06-01 07:12 GMT

வாக்களித்த நடிகை நுஸ்ரத் ஜகான்

நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜகான் கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பஷிர்கட் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான நுஸ்ரத் ஜகானுக்கு தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



2024-06-01 06:48 GMT

வாக்களித்த நடிகை கங்கனா ரனாவத்

நடிகையும், இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான கங்கனா ரனாவத் வாக்களித்தார். மண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கங்கனா ரனாவத் வாக்களித்தார்.  

2024-06-01 06:33 GMT

காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

பீகார் - 24.25%

இமாச்சலபிரதேசம் - 31.92%

ஜார்க்கண்ட் - 29.55%

ஒடிசா - 22.64%

பஞ்சாப் - 23.91%

உத்தரபிரதேசம் - 28.02%

மேற்குவங்காளம் - 28.10%

சண்டிகர் - 25.03%

2024-06-01 05:50 GMT

உத்தரபிரதேச மாநிலம் காசிபூரின் மோகன்புரா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா வாக்களித்தார். 

2024-06-01 04:29 GMT

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

பீகார் - 10.58%

இமாச்சலபிரதேசம் - 14.35%

ஜார்க்கண்ட் - 12.15%

ஒடிசா - 7.69%

பஞ்சாப் - 9.64

உத்தரபிரதேசம் - 12.94%

மேற்குவங்காளம் - 12.63%

சண்டிகர் - 11.64%

2024-06-01 03:18 GMT

வாக்களித்த ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 



2024-06-01 02:41 GMT

வாக்காளர்கள் பெருமளவு திரண்டு தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் பெருமளவு திரண்டு தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள் பெருமளவு திரண்டு ஜனநாயக கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன். வாக்களிப்பில் பங்குபெற்று நமது ஜனநாயகம் மேலும் துடிப்போடு செயல்படுவதை உறுதி செய்வோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்