'பிரதமர் மோடியின் முறைகேடுகளை பேசியதால் கெஜ்ரிவாலுக்கு சிறை' - சீமான் விமர்சனம்
பிரதமர் மோடி குறித்து சட்டமன்றத்தில் பேசிய கெஜ்ரிவாலை சிறையில் போட்டுவிட்டார்கள் என சீமான் பேசினார்.
சென்னை,
சென்னை மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-
"அமலாக்கத்துறை விசாரணை மூலம் நிறுவனங்களை மிரட்டி பணம் பெற்றவர் பிரதமர் மோடி என்று அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் பேசினார். அவரை சிறையில் போட்டுவிட்டார்கள். அதே கருத்தை நானும் பதிவு செய்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். எங்கெல்லாம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினார்களோ, அங்கெல்லாம் பணம் பறிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.