இனி யாராவது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினால்... கர்நாடக மந்திரி ஆவேசம்

ராய்ச்சூரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிலர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

Update: 2024-05-04 01:17 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நசீர் உசேன் வெற்றி பெற்றதும், அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய்ச்சூரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சிலர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கர்நாடக வீட்டு வசதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஜமீர் அகமதுகான்  ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மந்திரி ஜமீர் அகமதுகான், இனி யாராவது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினால், நானே அவர்களை டிஸ்யூம்... டிஸ்யூம்.... என துப்பாக்கியால் சுட்டுக்கொல்வேன் என ஆவேசமாக கூறினார். மந்திரியே சுட்டுக்கொல்வேன் என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்