திருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி தொடங்கியது... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
பேரணி நடைபெறும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;
திருச்சி,
திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி எனக்கூறி காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியின் பேரில் மாற்று பாதையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி நடைபெற்று வருகிறது. தில்ல நகர் சாலையில் தொடங்கி இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை வாகன பேரணி நடைபெறுகிறது. கூட்டணி கட்சியான அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜெ.பி.நட்டா வாக்கு சேகரித்து வருகிறார். ஜே.பி. நட்டாவுக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி நடைபெறும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.