ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வெற்றியை நெருங்கும் இந்தியா கூட்டணி - கெஜ்ரிவால்
ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பது தெளிவாகிறது என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.;
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலின் ஒவ்வொரு கட்டமும் முடிவடையும்போது, மோடி அரசாங்கம் வெளியேறி வருகிறது என்பதும், ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பதும் தெளிவாகிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்திய மந்திரி அமித்ஷாவும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் என்னை அவமதித்தனர்.
அமித்ஷா, பிரதமரால் நீங்கள் வாரிசாக அறிவிக்கப்பட்டீர்கள். அதனால் நீங்க ஆணவத்தை காட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் பிரதமராகவில்லை. கெஜ்ரிவாலுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை என்றும், பாகிஸ்தானில் ஆதரவாளர்கள் அதிகம் என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். நீங்கள் என்னை அவமதிக்காலம். ஆனால் நாட்டு மக்களை சபிக்காதீர்கள். பொதுமக்களை திட்டினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கெஜ்ரிவால் கூறினார்.