'மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - சீதாராம் யெச்சூரி

மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-25 17:45 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் தனது வாக்கை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"நாடு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பதற்காக மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். இந்த தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் வகுப்புவாத பிரிவினையை தூண்டி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்